உயிரில் பாதி தந்து என்னை உருவாக்கியவள்
உலகில் பாதியை எனக்கு உணர்த்தியவள்
அன்பிற்கோர் எல்லையில்லை என்று புகட்டியவள்
பாசத்திற்கார் வேசமில்லை என்றுசொல்லியவள்
பாலர் பருவத்தில் அம்மாவாக இருந்தவள்
இருபதாவது வயதினில் சகோதரியாக இருந்தாள்
என் முப்பது தனில் என்சொல் கேட்கும் மகளாகிவிட்டாள்
நான் நாற்பதைக் கடந்தபோது "அந்தோ பரிதாபம்"
என் குடும்பத்திற்கு வேண்டப்படாத ஒருத்தியாகிவிட்டாள்..
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமையான கவிதைகள். இதை பலபேர் பார்காமல் இருப்பது பாவம். நான் உங்களின் ஆக்கங்களை உள்வாங்குகிறேன். அப்போதாவது மறுமொழிகளும் பாராட்டுக்களும் வந்து குவியட்டும்.
அருமை!!! அருமை!!! அருமை!!!
ஒரு தாயின் நிலையை இவ்வளவு அழகாக, அற்புதமாக படைத்த உமக்கு என் நன்றிகள்.
நான் மிகவும் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
நன்றி தர்சன் ,தொலைத்தவன் தொடர்ந்தும் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்.
Post a Comment